தமிழ்நாடு

“தனி மனிதனின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம்” : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு THE WEEK பாராட்டு!

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் தமிழ்நாடு மிகப்பெரும் வளர்ச்சி கண்டுள்ளது” என “தி வீக்” ஆங்கில இதழ் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

“தனி மனிதனின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம்” : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு THE WEEK பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் தமிழ்நாடு மிகப்பெரும் வளர்ச்சி கண்டுள்ளது” என “தி வீக்” ஆங்கில இதழ் பாராட்டுத் தெரிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு - “வளர்ச்சியின் பாதையில் கவனம்” என்ற தலைப்பில் “தி வீக்” ஆங்கில இதழ் வெளியிடுள்ள சிறப்புக் கட்டுரையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திறமையான தலைமையின் கீழ் தமிழ்நாடு, அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியை இலக்காகக் கொண்டுள்ளது என்றும், ஒவ்வொரு தனி மனிதனின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்காக முதலமைச்சர் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள விரைவான மாற்றங்களுக்கு ஏற்ப தமிழ்நாட்டிற்கான தொலை நோக்குப் பார்வையை வகுத்து, தரவு மையக் கொள்கையை அரசு செயல்படுத்தியிருப்பதையும் “தி வீக்” இதழ் குறிப்பிட்டுக்காட்டியுள்ளது. தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புக் கொள்கை கிராமப்புற மக்களுக்கு தடையற்ற இணைய வசதியை வழங்க உதவும் என்றும், மாநிலத்தில் தொலைத்தொடர்பு சம்பந்தமான விண்ணப்பம், ஒப்புதல் மற்றும் நிறுவல் செயல்முறை களை இது எளிதாக்கும் என்றும் “தி வீக்” இதழ் தெரிவித்துள்ளது.

முன் கணிப்புப் பகுப்பாய்வு மற்றும் நிகழ் நேரத்தரவுகளைப் பயன்படுத்தி, உருவாக்கப்பட்டுள்ள முதலமைச்சர் டேஷ்போர்டு திட்டம், அரசின் திட்டங்களைக்கண்காணிக்கவும் உடனடியாக முடிவெடுக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என “தி வீக்” இதழ் கூறியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், எப்போதும் தொழிலாளர்களுடன் நட்போடு பழகுபவர் என்றும், ஊழியர்களின் நலனில் அக்கறை கொண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்ததன் மூலம், அனைத்து ஊழியர்களுக்கும் பணியிடங்களில் இருக்கை வசதி ஏற்படுத்தித் தந்தவர் என்றும் “தி வீக்” இதழ் புகழ்ந்துரைத்துள்ளது.

“தனி மனிதனின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம்” : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு THE WEEK பாராட்டு!

ஃபாக்ஸ்கான் நிறுவனப் பிரச்சினையில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளித்ததால், மூடும் சூழலில் இருந்த அந்தத் தொழிற்சாலை தற்போது மீண்டும் செயல் படத்தொடங்கி, அங்கு 3ஆயிரத்து 931 தொழிலாளர்கள் அமைதியான சூழலில் பணிபுரிந்து வருவதையும் “தி வீக்” இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மூலம், கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் போதுமான குடிநீர் வழங்குவது, சாலைகளை உருவாக்குதல், “அனை வருக்கும் வீடு” திட்டத்தில் கிராமப்புற வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு, ஊரகப் பகுதிகளில் நீர் நிலை களைப் புதுப்பித்தல் போன்ற திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசு சிறப்பாக மேற்கொண்டது என “தி வீக்” இதழ் குறிப்பிட்டுள்ளது.

இதே பேன்று “கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்”, ``நமக்கு நாமே திட்டம்’’ போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி, அடிப்படைக் கட்டமைப்பு, சமுதாயக் கூடங்கள், அறிவு மையங்கள், சந்தைகள் போன்றவற்றை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தெரி வித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் “தி வீக்” நாளிதழ் பட்டியலிட்டுள்ளது. தமிழ்நாட்டை தொழில்மயமாகக் வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் 45ஆயிரம் ஏக்கரில் நில வங்கி உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தமிழ்நாடு “ஃபின்டெக்” கொள்கை 2021, தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு உத்தி 2021 போன்ற அறிவிப்புகள் பாராட்டத் தக்கவை என்றும் “தி வீக்” இதழ் கூறியுள்ளது.

“தனி மனிதனின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம்” : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு THE WEEK பாராட்டு!

2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற தமிழ்நாடு அரசு விரும்புகிறது என்று குறிப்பிட்டுள்ள “தி வீக்” இதழ், இந்த இலக்கை அடைவதற்கான முதல்படியாக, 62 ஆயித்து 276 கோடி முதலீட்டிற்கு 124 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

மருத்துவத் துறையில் திரவ ஆக்சிஜன் உற்பத்திக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், சென்னை ஓமந் தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மேம்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சை மையத்தைத்திறந்து வைத்தது உள்ளிட்ட சாதனைகளை யும் “தி வீக்” இதழ் நினைவு கூர்ந்துள்ளது.

இதேபோன்று கொரோனா தொற்றின் போது ஏற்பட்ட பொருளாதார விளைவுகளைச் சமாளிக்க குறு, சிறு மற்றம் நடுத்தரத் தொழிற் துறைக்கு புத்துயிர் அளிக்கும் விதத்தில் ஆண்டுக்கு 360 கோடி ரூபாய் மூலதன மானிய அனுமதி, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 125 கோடி மானியத் துடன் 758 திட்டங்களுக்கு அனுமதி, தனிநபர் அடிப்படையிலான மானியம், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 3,239 பயனாளிகளுக்கு மானியம் போன்றவை வழங்கப்பட்டுள்ளது என்றும் “தி வீக்” இதழ் விவரித்துக் கூறியுள்ளது.

புதிய மாணவர்களைப் பள்ளியில் சேர்க்கும் வகையிலும் பள்ளி இடைநிற்றலைக் குறைக்கும் வகையிலும் “இல்லம் தேடி கல்வி”த் திட்டம், “நான் முதல்வன்” திட்டம், எண்ணும் எழுத்தும் பணி போன்ற புதிய திட்டங்களைக் கொண்டு வந்ததால் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி பன்முக வளர்ச்சியடைந்துள்ளதாக “தி வீக்” இதழ் பாராட்டியுள்ளது.

banner

Related Stories

Related Stories