தமிழ்நாடு

காதலி கழட்டிவிட்டதால் மன உளைச்சல்? ஹாஸ்டலில் தூக்கில் தொங்கிய பி.டெக் மாணவன்: தனியார் பல்கலையில் பரபரப்பு

தற்கொலை விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்ட பின்னரே தற்கொலைக்கான உண்மை அறியவரும் என போலிஸார் தெரிவிக்கின்றனர்.

காதலி கழட்டிவிட்டதால் மன உளைச்சல்? ஹாஸ்டலில் தூக்கில் தொங்கிய பி.டெக் மாணவன்: தனியார் பல்கலையில் பரபரப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காதலித்த பெண் கழட்டிவிட்டதால் மனமுடைந்த வட மாநில கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை.

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் இயங்கி வரும் தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சட்டீஸ்கர் மாநிலத்தைச் சார்ந்த ரமேஷ் அகர்வால் என்பவரின் மகன் ஷங்கர் அகர்வால் (21) அவர் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

காதலி கழட்டிவிட்டதால் மன உளைச்சல்? ஹாஸ்டலில் தூக்கில் தொங்கிய பி.டெக் மாணவன்: தனியார் பல்கலையில் பரபரப்பு

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மறைமலைநகர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுற்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டதில், மாணவர் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த பெண்ணை காதலித்து வந்ததாகவும், அப்பெண் இவரை கழட்டிவிட்டு வேறொருவரை காதலிப்பதை அறிந்த மாணவர் மன உளைச்சலில் தற்கொலை செய்துக்கொண்டார் என தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த தற்கொலை விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்ட பின்னரே தற்கொலைக்கான உண்மை அறியவரும் என தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories