தமிழ்நாடு

கேரளாவை அடுத்து.. பிரியாணி சாப்பிட்ட 24 பேருக்கு வாந்தி, மயக்கம்: உணவு பிரியர்கள் அதிர்ச்சி!

பிரியாணி சாப்பிட்ட 24 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை அடுத்து.. பிரியாணி சாப்பிட்ட 24 பேருக்கு வாந்தி, மயக்கம்: உணவு பிரியர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கெட்டுப்போன சிக்கனில் ஷவர்மா தயாரித்ததாலே அந்த விபரீதம் நடந்தது என விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் பிரியாணி சாப்பிட்ட 24 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மேலும் பீதியடைய வைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் சித்திரவேல். இவரின் புதிய வீட்டிற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களுக்குப் புதுக்கோட்டையில் உள்ள கடை ஒன்றிலிருந்து 40 பிரியாணி பொட்டலங்கள் வாங்கி வந்து கொடுத்துள்ளனர்.

கேரளாவை அடுத்து.. பிரியாணி சாப்பிட்ட 24 பேருக்கு வாந்தி, மயக்கம்: உணவு பிரியர்கள் அதிர்ச்சி!

இதை சாப்பிட்ட அனைவருக்கும் இரவிலிருந்தே வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பிரியாணி சாப்பிட்டதில் இதுவரை 24 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.

இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பிரியாணி வாங்கி வந்த கடையில் ஆய்வு செய்து, கடைக்குச் சீல் வைத்துள்ளனர். மேலும் உணவகத்தில் இருந்த உணவுகளை ஆய்விற்கு அனுப்பிவைத்துள்ளனர். அடுத்தடுத்து பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஏதாவது ஒன்றி ஏற்பட்டு வருவது உணவு பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories