தமிழ்நாடு

“என்னது 3 நாளைக்கு முன்னாடி செஞ்சதா..?” : வாடிக்கையாளர் அதிர்ச்சி - பிரபல பிரியாணி கடையில் நடந்தது என்ன?

பிரபலமான பிரியாணி கடையில் ஊசிப்போன பிரியாணி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“என்னது 3 நாளைக்கு முன்னாடி செஞ்சதா..?” : வாடிக்கையாளர் அதிர்ச்சி - பிரபல பிரியாணி கடையில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விழுப்புரம் மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு முன்பு பிரபலமான பிரியாணி கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கடந்த புதனன்று வந்த வழக்கறிஞர் ஒருவர் நாட்டுக்கோழி பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.

பின்னர், அவருக்கு ஆர்டர் செய்த பிரியாணி கொடுக்கப்பட்டது. இதை சாப்பிட்டபோது பிரியாணியில் ஊசிப்போன வாடை வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடையில் வேலை செய்பவர்களிடம் கேட்டுள்ளார்.

அப்போது அவரும் பிரியாணியை சாப்பிட்டுவிட்டு, இது கெட்டுப்போன பிரியாணிதான் என கூறியுள்ளார். மேலும் மூன்று நாட்களுக்கு முன்பு சமைக்கப்பட்ட பிரியாணி எனவும் அவர் வழக்கறிஞரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.

உடனே இதுகுறித்து வழக்கறிஞர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பிரபல பிரியாணி கடையில் அதிரடி சோதனை செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories