தமிழ்நாடு

அடகு கடை சுவரில் துளை போட்டு திருடிய மர்ம நபர்கள்.. மயிலாடுதுறை அருகே அதிர்ச்சி!

அடகு கடையின் சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் நகை மற்றும் பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடகு கடை சுவரில் துளை போட்டு திருடிய மர்ம நபர்கள்.. மயிலாடுதுறை அருகே அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மயிலாடுதுறை அருகே அடகு கடையின் சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் நகை மற்றும் பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் ஆலங்குடி கிராமத்தில், புதுபிடாகையை சேர்ந்த சதீஷ்குமார் (34) என்பவர் பைனான்ஸ் மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார்.

சதீஷ்குமார், நேற்றிரவு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை ஏழு மணிக்கு அவ்வழியே சென்றவர்கள் பைனான்ஸ் மற்றும் அடகு தலையின் பக்கவாட்டு சுவர் துளையிடப்பட்ட இருப்பதாக சதீஷ்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சதீஷ்குமார் வந்து பார்த்தபோது கடையின் பக்கவாட்டுச் சுவர் துளையிடப்பட்டு 2 சிசிடிவி கேமராக்கள், 5 கிராம் நகைகள் மற்றும் லேப்டாப், ரூ. 20 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுவரில் துளையிட்டு திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories