தமிழ்நாடு

சேர்ந்து வாழ அழைத்த கணவனை கொல்ல முயற்சி.. காதலனுடன் சேர்ந்து மனைவி கைது.. திருவொற்றியூர் போலிஸ் அதிரடி!

சேர்ந்து வாழ அழைத்த கணவனை கொல்ல முயற்சி.. காதலனுடன் சேர்ந்து மனைவி கைது.. திருவொற்றியூர் போலிஸ் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன்(42). மீனவர். இவரது மனைவி அபிமுனிசா. இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அபிமுனிசா கணவனை விட்டு பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

கணவன் மணிமாறன் பலமுறை சென்று மனைவியை அழைத்தும் வர முடியாது என்று மறுத்துவிட்டார். இந்நிலையில் தனிமையில் இருந்த அபிமுனிசாவிற்கும் திருவொற்றியூர் பூங்காவனபுரத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும் இடையே சில ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியிருக்கிறது.

இதனையடுத்து யுவராஜும் அபிமுனிசாவும் கணவன் மனைவியாகவே வாழத் தொடங்கினர். இந்த விஷயம் மணிமாறனுக்கு தெரியவரவே சில தினங்களுக்கு முன்பு மனைவியை சந்தித்து மீண்டும் என்னுடன் வா இல்லையென்றால் குழந்தைகளை என்னிடம் கொடுத்துவிடு என்று கேட்டுள்ளார்.

அதற்கு நான் யுவராஜுடன்தான் வாழ்வேன் குழந்தைகளையும் கொடுக்க மாட்டேன் என்று மறுத்து உள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் மணிமாறன் திருச்சினாங்குப்பம் கடற்கரையில் மீன்பிடி வலைகளை சரி செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே போதையில் யுவராஜ் மற்றும் அவரது நண்பர் ராம்குமார் சென்று மணிமாறனிடம் அபிமுனிசா இப்போது என்னுடைய காதலி இனிமேல் அவரை வரச் சொல்லி தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்.

அதற்கு மணிமாறன் அவள் என்னுடைய மனைவி அவள் என்னுடன்தான் வாழ வேண்டும். இதை கேட்பதற்கு நீ யார் என்று பதில் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாய் தகராறு முற்றி கைகலப்பாகியது. ஆத்திரமடைந்த யுவராஜ் அருகிலிருந்த சுத்தியலை எடுத்து மணிமாறனை தலையில் ஓங்கி அடித்ததில் தலையில் காயம் அடைந்து மயங்கி கீழே விழுந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே யுவராஜ் மற்றும் ராம்குமார் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். மணிமாறன் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து திருவொற்றியூர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் தூங்காவனபுரத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த யுவராஜ் (36), ஒண்டிகுப்பத்தை சேர்ந்த ராம் குமார் (32), அபிமுனிசா ஆகியோரை போலிஸார் கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories