தமிழ்நாடு

சாலை விபத்தில் இளைஞர் மூளைச்சாவு.. வேலூர் டூ சென்னை - 1.30 மணி நேரத்தில் ஜெட் வேகத்தில் வந்த இதயம்!

திருப்பத்தூரில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் 1.35 மணி நேரத்தில் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் இளைஞர் மூளைச்சாவு.. வேலூர் டூ சென்னை - 1.30 மணி நேரத்தில் ஜெட் வேகத்தில் வந்த இதயம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேலூர் மாவட்டம்பேர்ணாம்பட்டு அருகே வாணியம்பாடி மதனாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தினகரன் (21). இவர் பேர்ணாம்பட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார்.

இதில், படுகாயமடைந்த அவரை வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் (சி.எம்.சி) சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால் தினகரனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் அனுமதியுடன் அவரது இரண்டு சிறுநீரகங்கள்,கல்லீரல், இதயம் ஆகியவை வேறு நபர்களுக்கு தானம் செய்யப்பட்டுள்ளது.

அவ்வகையில், தினகரனின் இதயம் மட்டும் சென்னை அப்பல்லோ மருத்துவனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக இன்று மாலை 3.15 மணி அளவில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது இதயம் 4.35 மணிக்கு கிரீம்ஸ் ரோட்டில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனையைக் கொண்டு வரப்பட்டது.கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திலேயே ஆம்புலன்ஸ் வேலூரிலிருந்து சென்னைக்கு வந்துள்ளது. போக்குவரத்து போலிஸாரின் உதவியுடன் இந்த பணி வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.

அதுவும் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் சென்னை வானகரம், கோயம்பேடு, அரும்பாக்கம், அண்ணா ஆர்ச், அமைந்தகரை, ஈகா திரையரங்கம் சாலை, சேட் பட், கல்லூரி சாலை, உள்ளிட்ட சாலையில் ஆம்புலன்ஸ் செல்வதற்காக போக்குவரத்து போலிஸார் தயார் நிலையில் அனைத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். ஒன்றரை மணி நேரத்திலேயே ஆம்புலன்ஸை ஓட்டிவந்த வேல்முருகனுக்கும், போக்குவரத்து போலிஸாருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories