தமிழ்நாடு

“MGR, சிவாஜி முதல் வடிவேலு, விவேக் வரை 500 படங்கள்..” : ரங்கம்மாள் பாட்டி காலமானார் !

பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில், குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான ரங்கம்மாள் (85) பாட்டி, உடல்நலக்குறைவால் காலமானார்!

“MGR, சிவாஜி முதல் வடிவேலு, விவேக் வரை 500 படங்கள்..” : ரங்கம்மாள் பாட்டி காலமானார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கம்மாள். 85 வயதாகும் ரங்கம்மாள் பாட்டி, 1967ல் திரைப்படத்தின் முலம் நடிக்கத் தொடங்கி நிலையில், தற்போதுவரை 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த விவசாயி உள்ளிட்ட படங்கள் முதல் சிவாஜிகணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய், விஷால், உதயநிதி ஸ்டாலின் நகைச்சுவை நடிகர் வடிவேலு, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சினிமா வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில் வறுமையில் இருந்து வந்தார். இவருக்கு சில நடிகர்கள் அவ்வபோது உதவி செய்து வந்த நிலையில், வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே உடல்நிலை மோசமான நிலையில் இருந்த ரங்கம்மாள் பாட்டி இன்று மதியம் தனது வீட்டில் உயிரிழந்தார். இவரின் மறைவு சினிமாத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories