தமிழ்நாடு

சென்னை மக்கள் கவனத்திற்கு... நந்தனம் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்.. என்னென்ன மாற்றம் தெரியுமா?

சென்னை நந்தனம் சிக்னல் அருகே சோதனை முறையில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மக்கள் கவனத்திற்கு... நந்தனம் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்.. என்னென்ன மாற்றம் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை நந்தனம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இன்று முதல் 10 நாட்களுக்கு வரை போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தி.நகர் வெங்கட்நாராயண சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள், அண்ணாசாலை மற்றும் வெங்கட்நாராயண சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, தேனாம்பேட்டை நோக்கி 200 மீட்டருக்கு மேல் சென்று டோயாட்டோ ஷோரூம் முன் ”யு திருப்பம்” திரும்பி தங்கள் இலக்கை அடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செனடாப் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணாசாலை மற்றும் செனடாப் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, சைதாப்பேட்டை நோக்கி 250 மீட்டருக்கு மேல் சென்று, டோயாட்டோ ஷோரூம் முன் ”யு திருப்பம்” திரும்பிச் சென்று வாகன ஓட்டிகள் சேரும் இடத்தை அடையாலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிதாசன் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணாசாலை மற்றும் பாரதிதாசன் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, சைதாப்பேட்டை நோக்கி நேராக 300 மீட்டர் தூரம் சென்று, டோயாட்டாவுக்கு முன்னால் ”யு திருப்பம்” திரும்பி இலக்கை அடையாளம் என்றும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு, வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

banner

Related Stories

Related Stories