
தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து விடுவோம் என தேர்தல் வரும்போது எல்லாம் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்நாட்டு மக்கள் 'உங்கள் எண்ணம் இங்கு ஒருநாளும் பலிக்காது' என தங்கள் வாக்கு மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது கூட அ.தி.மு.கவின் துணை கொண்டு எப்படியாவது அதிக தொகுதிகளில் இடம் பிடித்துவிட வேண்டும் என திட்டம்போட்டு வேலை செய்தனர். ஆனால் அவர்களால் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. இதுவும் அ.தி.மு.கவின் துணையால் மட்டுமே இந்த வெற்றி அவர்களுக்குக் கிடைத்துள்ளது.
அண்மையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் ஒரு ஓட்டுக் கூட கிடைக்காமல் பல இடங்களில் பா.ஜ.கவினர் படுதோல்வியடைந்தனர். அவர்களின் குடும்ப உறவினர்களே அவர்களுக்கு ஓட்டுபோடவில்லை. மேலும் இந்திய அளவில் 'ஒத்த ஓட்டு பா.ஜ.க' என்ற வைரலானது.

இந்நிலையில் பா.ஜ.க இளைஞர் அணியைச் சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி என்பவர், தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் வரை ஓயமாட்டோம் (rest) என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்துப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல இயக்குநரின் மகள் ஜான் மகேந்திரன் இவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். பிரசாத் ரெட்டி ட்விட்டருக்கு பதிலளித்த ஜான் மகேந்திரன், 'Rest in Peace' என கிண்டலடித்துள்ளார். தற்போது ஜான் மகேந்திரன் இந்த ஒற்றை பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.








