சினிமா

KGF-2 வெற்றியால் ஆடிப்போன பாலிவுட்.. பதிலடி கொடுத்த ரம்யா.. திரையுலகில் விவாதப் பொருளான மொழி பிரச்சனை!

இந்தி தேசிய மொழி என கூறிய நடிகர் அஜய் தேவ்கனுக்கு நடிகை ரம்யா பதிலடி கொடுத்துள்ளார்.

KGF-2 வெற்றியால் ஆடிப்போன பாலிவுட்.. பதிலடி கொடுத்த ரம்யா.. திரையுலகில் விவாதப் பொருளான மொழி பிரச்சனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாகுபலி, கே.ஜி.எஃப், புஷ்பா ஆகிய படங்கள் இந்திய சினிமா ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் தற்போது வெளியான கே.ஜி.எஃப் -2 அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப் படம் இந்திய அளவில் பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது. மேலும் கே.ஜி.எஃப் -2 படத்தை பான் இந்தியா படமாக அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கே.ஜி.எஃப் -2 படத்தின் வெற்றி இந்தி நடிகர்களை வெறுப்படைய செய்துள்ளது நடிகர் அஜய் தேவ்கன் பேச்சின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் கிச்சா சுதீப், “ஒரு கன்னட படம் பான்-இந்தியா படமாக எடுக்கப்பட்டது என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் ஒரு சிறிய திருத்தம், இந்தி தேசிய மொழி அல்ல. பாலிவுட்டும் பல பான்-இந்தியா திரைப்படங்களைத் தயாரிக்கிறது.

அவை தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிடப்படுகின்றன. ஆனால் வெற்றி பெறப் போராடுகின்றன. இன்று நாம் எங்கு வேண்டுமானாலும் ஓடக்கூடிய படங்களைத் தயாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

இதற்கு, பதிலளித்த நடிகர் அஜய் தேவ்கன், “உங்களை பொறுத்தவரை இந்தி தேசிய மொழி இல்லை என்றால், ஏன் உங்கள் தாய்மொழிப் படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? எப்போதும் இந்தி தான் நமது தாய் மொழியாகவும் தேசிய மொழியாகவும் இருக்கும்” தெரிவித்தார். இது சினிமா உலகில் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில், நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, அஜய் தேவ்கன் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து ரம்யா தனது ட்விட்டர் பதிவில், "இந்தி தேசிய மொழி கிடையாது. அஜய் தேவ்கனின் அறியாமை தான் அவரை இப்படி பேச வைக்கிறது. புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் மற்றும் கே.ஜி.எஃப் 2 படங்கள் வெற்றி தான் இந்த பிரச்சனைக்குக் காரணம். உங்கள் படங்களை நாங்கள் ரசித்துப் பார்ப்பதுபோல எங்கள் படங்களையும் நீங்கள் ரசித்து பாருங்கள்." என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களிலும், இந்திய திரையுலகிலும் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. இந்த விவாதங்களை அடுத்து, “ராக்கி பாய் வெடி வச்சது நராச்சில மட்டுமில்லை இந்தி சினிமா சினிமாக்காரனுங்க அடி மடியிலயும் தான்” என நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories