தமிழ்நாடு

நள்ளிரவில் திருட்டு.. தட்டிக்கேட்ட சமையல்காரரை இரும்பு கம்பியால் கொடூரமாக அடித்து கொலை : ‘பகீர்’ சம்பவம்!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நள்ளிரவில் மின்மோட்டார் திருடுவதை தடுக்க முயன்ற சமையல்காரரை இரும்பு ராடால் தலையில் அடித்து கொடூரமாக கொன்ற இளைஞரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நள்ளிரவில் திருட்டு.. தட்டிக்கேட்ட சமையல்காரரை இரும்பு கம்பியால் கொடூரமாக அடித்து கொலை : ‘பகீர்’ சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நள்ளிரவில் மின்மோட்டார் திருடுவதை தடுக்க முயன்ற சமையல்காரரை, அவரது வீட்டிற்கு வெளியே வைத்து தலையில் இரும்பு ராடால் கொடூரமான அடித்து கொலை செய்த இளைஞரை போலிஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

ஆற்காடு அருகே ராமசாமி தெருவில் வசித்து வந்தவர் திருமால் (59). அதே பகுதியில் திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு சமைக்கும் தொழில் செய்து வருகிறார். திருமால் கடந்த 22ம் தேதி அவரது வீட்டில் உறங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டிற்கு வெளியே

இருந்த பொது மின்மோட்டாரை இளைஞர் ஒருவர் திருட முயன்றதால் எழுந்த சத்தத்தை கேட்டு வெளியே சென்று பார்த்துள்ளார். பொது மின்மோட்டாரை திருடப்படுவதால் கூச்சலிட்டதோடு அந்த இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அச்சமடைந்த மின்மோட்டார் திருட்டில் ஈடுபட்டு இருந்த செல்வம் என்ற இளைஞர் திடீரென இரும்பு ராடால், திருமாலின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 5 நாட்களாக மேற்கொண்ட தொடர் விசாரணையில் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories