தமிழ்நாடு

‘அமித்ஷாவே திரும்பிப் போ’.. புதுச்சேரியில் ஒன்றிய அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் !

புதுச்சேரிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்கு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அரசியல் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் சேர்ந்தவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

‘அமித்ஷாவே திரும்பிப் போ’.. புதுச்சேரியில் ஒன்றிய அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தலின்போது புதுச்சேரி மாநிலத்திற்கு அறிவித்த மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி, கூடுதல் நிதி உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாத ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்தும், இந்தி மொழியை திணிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமித்ஷாவே திரும்பிப் போ என்ற கோஷத்துடன் புதுச்சேரி சாரம் திடலில் பதாகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மூ.சலிம், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போராட்டத்திற்காக புதுச்சேரி சாரம் பகுதியில் கருப்பு பலூன் விற்பனையாளரையும் போலிசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு பொட்டலம் பலூன் மற்றும் இரண்டு சிலிண்டர்களை போலிஸார் பறிமுதல் செய்தனர்.

banner

Related Stories

Related Stories