தமிழ்நாடு

”பெட்ரோல் விலை உயர்வை மூடி மறைக்க மின்வெட்டை கையில் எடுத்த மோடி அரசு” - அம்பலப்படுத்திய தயாநிதி மாறன் MP!

ஒன்றிய அரசு மாநில அரசிற்கு தரவேண்டிய நிலக்கரியை முறையாக தருவதில்லை என தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெட்ரோல் டீசல் விலை உயர்வை திசை திருப்பவே மின்வெட்டு விவகாரத்தை ஒன்றிய அரசு கையில் எடுத்துள்ளதாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, பிராட்வே இப்ராஹிம் சாலையில் அமைந்துள்ள மாடி பூங்காவை நவீன வசதிகளுடன் புனரமைக்கும் பணிக்கான அடிக்கல்லை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் துவக்கி வைத்தனர்.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இந்த பூங்காவை சுமார் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புதுப்பித்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ”தொடர்ந்து உயரும் பெட்ரோல் டீசல் விலை விவகாரத்தை திசை திருப்பவே ஒன்றிய அரசு மின்வெட்டு பிரச்சனையை மாநில அரசு மீது சுமத்துவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் ஒன்றிய அரசு மாநில அரசிற்கு தரவேண்டிய நிலக்கரியை முறையாக தருவதில்லை” எனவும் குற்றம் சாட்டினார்.

அதன்பின் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் விமர்சனம் தொடர்பான நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, ”உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எனவே அவர் பேச அனைத்து தகுதியும் உண்டு. ஆனால் அண்ணாமலையை மக்கள் புறக்கணித்து விட்டார்கள்” எனக் கூறினார்.

நிகழ்ச்சியில் திரு.வி.க நகர் சட்ட மன்ற உறுப்பினர் தாயகம் கவி, ஐந்தாவது மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு மாமன்ற உறுப்பினர் பரிமலம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories