அரசியல்

”கோழி, ஆட்டை எப்படி வெட்டனும்னு எங்களுக்கு பாடமெடுக்க வேண்டாம்” - அமித்ஷா பேச்சுக்கு தயாநிதி மாறன் பதிலடி

மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்துங்கள். மாறாக இந்தி மொழியை திணிக்க வேண்டாம் என தயாநிதிமாறன் எம்.பி கேட்டுக்கொண்டுள்ளார்.

”கோழி, ஆட்டை எப்படி வெட்டனும்னு எங்களுக்கு பாடமெடுக்க வேண்டாம்” - அமித்ஷா பேச்சுக்கு தயாநிதி மாறன் பதிலடி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுறுத்தி உள்ளார். இந்நிலையில் சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் மோர் பந்தல் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குறிப்பாக சென்னை மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருவல்லிக்கேணி ஸ்டார் திரையரங்கம் எதிரே, சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் பகுதி அருகில், புதுப்பேட்டை மார்க்கெட் பகுதியில், மற்றும் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் எதிரில் ஆகிய பகுதிகளில் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு ஏற்பாட்டில் மோர் மற்றும் தண்ணீர் பந்தலை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மோர் தண்ணீர் இளநீர் பழங்கள் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு அளித்து தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்வின் பொழுது ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன், பகுதி செயலாளர் மதன் மோகன் மற்றும் மாபா அன்பு துறை மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சியை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளரை சந்தித்த மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், “ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தி மொழியை கற்க உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். ஆங்கிலம் படித்ததால்தான் தமிழர்கள் இன்று உலகளவில் முன்னேறி உள்ளனர். ஆனால், இந்தி படித்தவர்கள் தமிழகத்தில் வேலை தேடி வருகிறார்கள். ஆங்கிலம் படித்தால் உலகளவில் வேலை வாய்ப்பை பெற முடியும்.

ஒரு மொழிக்காக இன்னொரு மொழியை ஒழிக்கும் முறை கூடாது. முதலில் பெட்ரோல் விலையை குறையுங்கள். நீட் தேர்வில் இருந்து விலக்கு தாருங்கள். மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்துங்கள். மாறாக கோழி எப்படி வெட்ட வேண்டும் ஆட்டை எப்படி வெட்ட வேண்டும் என பாடம் எடுக்க வேண்டாம் என்றார்.

குறிப்பாக என்றுமே இருமொழி கொள்கைதான் தங்களது நிலைப்பாடு எனவும், இந்தியை திணித்தால் அதனை எதிர்த்து என்றும் குரல் கொடுப்போம். விட மாட்டோம் என்றார்.

banner

Related Stories

Related Stories