தமிழ்நாடு

“தமிழ்நாட்டில் மின்தடைக்கான காரணம் என்ன?” : பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்!

தமிழ்நாட்டில் மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததால்தான் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் மின்தடைக்கான காரணம் என்ன?” : பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததால் தான் தமிழ்நாட்டில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் விவாதத்தின் போது பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி மின்வெட்டு தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது அவர் பேசியதாவது, “மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கவேண்டிய 296 மெகாவாட் மின்சாரம் தற்போது வரை கிடைக்கவில்லை. மின்பற்றாக்குறையைச் சமாளிக்க 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுமார் 4.80 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல் டன் 137 டாலர் என்ற விலையுடன் ஜி.எஸ்.டி சேர்த்து 143 டாலர் என்ற விலையில் நிலக்கரி இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு நாள் ஒன்றுக்கு 75 ஆயிரம் டன் நிலக்கரி தேவை ஏற்பட்டுள்ளது. அதனால் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சொந்த மின் உற்பத்தியை 37 விழுக்காடு அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குஜராத், மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மின்தடை என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஒன்றிய அரசு குறைந்தளவே நிலக்கரி ஒதுக்குவதால் அடுத்த 2 மாதத்துக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கடந்த காலங்களில் 5 சதவீதம் கூட மின்உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 5 ஆண்டுகளில் மட்டும் 68 முறை இதே சூழல் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories