தமிழ்நாடு

நைட் ஷோ படம் பார்த்துவிட்டு வந்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு.. தலைமறைவாக இருந்த 6 பேர் கைது.. போலிஸ் அதிரடி

சினிமா பார்த்துவிட்டு வெளியே வந்த இளைஞரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிய வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் 6 பேரை உடனடியாக போலிஸார் கைது செய்தனர்.

நைட் ஷோ படம் பார்த்துவிட்டு வந்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு.. தலைமறைவாக இருந்த 6 பேர் கைது.. போலிஸ் அதிரடி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் ஒண்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் இவர் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சிலருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது எதிர் தரப்பினரை தாக்கிவிட்டு அப்பகுதியில் உள்ள திரையரங்கில் நண்பர்களுடன் இரவு காட்சி பார்த்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது திரையரங்கு வாசலில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த எதிர்தரப்பினர் ஆகாஷ் மற்றும் அவருடைய நண்பர்களை அரிவாளால் வெட்டியும் இரும்புக் கம்பிகளால் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இதுதொடர்பாக மணவாள நகர் காவல்துறையினர் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில் அதில் ராகுல் 21 பிரவீன் ராஜ் 22 பாலசுப்பிரமணி 21 யுவராஜ் 19 விக்னேஷ் 20 ஹரிஷ் குமார் (17 ) உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர் தலைமறைவாக உள்ள வெங்கடேசனை 25 காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அரிவாள் வெட்டில் காயமடைந்த ஆகாஷ் உள்ளிட்ட நண்பர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories