தமிழ்நாடு

“50 ஆயிரம் கொடுத்தா போதும்.. ஷார்ப்பா வேலை முடியும்” : சிக்கிய அதிகாரிகள் - துப்பு துலங்கியது எப்படி ?

பட்டா மாறுதல் மற்றும் கூட்டு பட்டாவில் பெயர் நீக்கம் செய்வதற்காக 50 ஆயிரம் ரூபாய் கையூட்டு வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது நண்பர் இருவரை லஞ்ச ஒழிப்புதுறையினர் கைது செய்துள்ளனர்.

“50 ஆயிரம் கொடுத்தா போதும்.. ஷார்ப்பா வேலை முடியும்” : சிக்கிய அதிகாரிகள் - துப்பு துலங்கியது எப்படி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஈஸ்வரன் என்பவர் பட்டா பெயர் மாற்றம் மற்றும் பட்டாவில் பெயர் நீக்கம் செய்வதற்காக மனு செய்ததாகவும், அதற்கு கிராம நிர்வாக அதிகாரியாக உள்ள விஜயன் ஐம்பதாயிரம் ரூபாய் கையூட்டு கேட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஈஸ்வரன் தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தன் அடிப்படையில், தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் கருப்பையா மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ஜெயப்பிரியா தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயன பவுடர் தடவிய ஐம்பதாயிரம் ரூபாயை கொடுத்து அனுப்பியதின் அடிப்படையில், கிராம நிர்வாக அதிகாரியின் நண்பரான இளமுருகனிடம் கொடுத்த பின்பு அந்த பணத்தை இளமுருகன் கிராம நிர்வாக அலுவலர் விஜயனிடம் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் விஜயன் மற்றும் அவரது நண்பர் இளமுருகன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கிராம நிர்வாக அலு வலகத்தில் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய பின்பு அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories