தமிழ்நாடு

காதலனின் மனைவி, மகள் பற்றி சமூக வலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்ட பெண்.. போக்சோ சட்டத்தில் கைது செய்த போலிஸ்!

காதலன் மனைவி மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய பெண்ணை போலிஸார் கைது செய்துள்ளனர்.

காதலனின் மனைவி, மகள் பற்றி சமூக வலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்ட பெண்.. போக்சோ சட்டத்தில் கைது செய்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த உமா ரஞ்சனி என்ற பெண்ணுக்கும், கோவையைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்துள்ளது. பின்னர் ரமேஷுக்கு திருமணம் ஆகியும் இந்த உறவு நீடித்து வந்துள்ளது.

இதுகுறித்து இரண்டு வீட்டினருக்கும் தெரிந்து தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இரண்டு குடும்பத்தினரும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில் இருவரும் பிரிந்துவிட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த உமா ரஞ்சனி, ரமேஷின் மனைவி மற்றும் அவரது 15 வயது மகள் குறித்து சமூக வலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உமா ரஞ்சனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories