இந்தியா

“பாலியல் குற்றங்களுக்கு Live-in Relationships தான் காரணம்”: மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் சர்ச்சை கருத்து!

பாலியல் குற்றங்களுக்கு Live-in-relationships தான் காரணம் என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் கருத்து தெரவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“பாலியல் குற்றங்களுக்கு Live-in Relationships தான் காரணம்”: மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் சர்ச்சை கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாலிபர் ஒருவருடன் கடந்த இரண்டு வருடங்களாக Live-in-relationships-ல் இருந்துள்ளார். பிறகு இந்த உறவில் முறிவு ஏற்பட்டு இருவரும் பரிந்துள்ளனர். இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதை தெரிந்துகொண்ட லிவின் உறவில் இருந்த அந்த வாலிபர் அப்பெண்ணை மிரட்டிவந்துள்ளார்.

மேலும் அந்தப் பெண்ணை திருமணம் செய்ய இருக்கும் குடும்பத்தினருக்கு வீடியோ அனுப்பி தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அவர்கள் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண், லிவ்இன் உறவில் இருந்த நபர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .

இதையடுத்து அந்த முன்ஜாமீன் கோரி மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் இந்தூர் பெஞ்சின் நீதிபதி சுபோத் அபியங்கர், Live-in-relationships தான் பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது. இந்த உறவு இந்திய சமூகத்தின் நெறிமுறைகளைச் சிதைக்கிறது என தெரிவித்துள்ளார். நீதிபதியின் இந்த சர்ச்சை கருத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories