தமிழ்நாடு

’இப்படியும் தொடரும் எதிர்ப்பு’ - பெட்ரோல் விலை உயர்வால் மணமுடித்த கையோடு சைக்கிளில் சென்ற புதுமண தம்பதி!

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் திருமணமான கையோடு புதுமணத் தம்பதியினர் சைக்கிளில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது

’இப்படியும் தொடரும் எதிர்ப்பு’ - பெட்ரோல் விலை உயர்வால் மணமுடித்த கையோடு சைக்கிளில் சென்ற புதுமண தம்பதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல்சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. பட்டதாரியான இவர் சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு கடந்த ஏப்ரல் 15ம் தேதியன்று இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி பகுதியை சேர்ந்த சிவரஞ்சனி என்கின்ற பட்டதாரி பெண்ணுக்கும் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஜெகசக்தி தனியார் திருமண மண்டபத்தில் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல முடியாததால் திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதியினர் மண்டபத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு சைக்கிளில் பயணித்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories