இந்தியா

”நான் போறேன்.. வேலை இருக்க யாரயாச்சும் கல்யாணம் பன்னிக்கோ” - விரக்தியில் உயிரைவிட்ட ம.பி., பட்டதாரி!

பணியில் இருக்கும் நபரை திருமணம் செய்துக்கொள்ளும்படி வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு 35 வயதான நபர் தற்கொலை

”நான் போறேன்.. வேலை இருக்க யாரயாச்சும் கல்யாணம் பன்னிக்கோ” - விரக்தியில் உயிரைவிட்ட ம.பி., பட்டதாரி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பட்டதாரியான பின்பும் வேலை ஏதும் கிடைக்காததால் பணியில் இருக்கும் நபரை திருமணம் செய்துக்கொள்ளும்படி வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு 35 வயதான நபர் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

சிந்த்வாரா பகுதியைச் சேர்ந்த சதிஷ் பிஜ்ஹடே என்ற நபர் ஹர்தா பகுதியில் வசித்து வந்தார். கடந்த 2020ம் ஆண்டு சமோடா தில்வாரி என்ற பெண்ணை மணமுடித்திருக்கிறார்.

மனைவி வனத்துறையில் பணியாற்றி வருகிறார். பி.டெக் பட்டதாரியான சதிஷுக்கு அவரது படிப்புக்கு ஏற்றவாறு எந்த வேலையும் கிட்டாததால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.

மேலும் வேலையிண்மை காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் விவாகரத்து பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் கடந்த ஏப்ரல் 16ம் தேதி தற்கொலை முடிவை கையில் எடுத்திருக்கிறார். அதன்படி வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கில் தொங்கியிருக்கிறார்.

முன்னதாக தனது மனைவி சமோடா தில்வாரிக்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தியும் அனுப்பியிருக்கிறார். அதில், “நான் செல்கிறேன். பணியில் இருக்கும் வேறொரு நபரை திருமணம் செய்துக்கொள்” என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், வீட்டிலும் இரண்டு பக்கத்திற்கு தற்கொலை குறிப்பும் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories