தமிழ்நாடு

பிரபந்தம் பாடுவதில் தகராறு.. காஞ்சிபுரம் கோவிலில் இரு பிரிவினரிடையே கைகலப்பு - முகம் சுழித்த பொதுமக்கள்!

காஞ்சிபுரம் வரதப்பெருமாள் பிரபந்தம் பாடுவதில் இருபிரிவினரிடையே தகராறு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபந்தம் பாடுவதில் தகராறு..  காஞ்சிபுரம் கோவிலில் இரு பிரிவினரிடையே கைகலப்பு - முகம் சுழித்த பொதுமக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை, தீபாராதனை வழிபாடு நடைபெற்றது. பின்னர் நள்ளிரவில் செவிலிமேடு பாலாற்று படுகையில் வரதராஜர் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அப்போது, பாலாற்றங்கரையில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டு, அவை கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் தள்ளி தாக்கிக் கொண்டனர்.

சித்ரா பௌர்ணமியையொட்டி 2 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற விழாவில், இரு பிரிவினருக்கிடையேயான மோதலால், இந்நிகழ்வை காண வந்த 1000க்கும் மேற்பட்ட பொது மக்களிடையே முக சுள்ளிப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஒவ்வொரு பெரிய திருவிழாவின் போதும் இரு பிரிவினரிடையே ஏற்படும் மோதல் நடைபெறாமலிருக்க இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு, இதற்கு ஓர் நிரந்தர தீர்வு ஏற்படுத்திட வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

banner

Related Stories

Related Stories