தமிழ்நாடு

உலக பாரம்பரிய தினம் : தமிழர்கள் கொண்டாடும் யுனெஸ்கோ அங்கீகரித்த ‘ஊட்டி மலை ரயில்’ பற்றி தெரியுமா?

நீலகிரி மலை ரயில் என்று அழைக்கப்படும் ஊட்டி மலை ரயிலை பற்றிய சிறப்புத்தொகுப்பு!

உலக பாரம்பரிய தினம் : தமிழர்கள் கொண்டாடும் யுனெஸ்கோ அங்கீகரித்த ‘ஊட்டி மலை ரயில்’ பற்றி தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மிகநீண்ட வரலாறு கொண்ட யுனெஸ்கோவால் பாரம்பரியச் சின்னம் என அங்கீகரிக்கப்பட்ட நீலகிரி மலை ரயில் என்று அழைக்கப்படும் ஊட்டி மலை ரயிலைப் பற்றி உலக பாரம்பரிய தினமான இன்று சிறப்புத்தொகுப்பை காண்போம்...

1854ஆம் ஆண்டு ஊட்டி மலையில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் முதன்முதலாக உருவாக்கப்பட்டது. ஆனால், மலைப்பகுதி மட்டுமல்லாமல் மிகவும் கரடுமுரடாக இருந்ததால் இந்தப் பணி தாமதடைந்து, 1891ஆம் ஆண்டு தான் ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. முதலில், அதாவது 1899ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையில் ரயில் பாதை அமைக்கப்பட்டது.

அதன்பின்னர் 1908ஆம் ஆண்டு ஊட்டி வரை இந்த ரயில் பாதை நீட்டிக்கப்பட்டது. அந்த ஆண்டு முதல் மலை ரயில் போக்குவரத்து தொய்வின்றி நடந்து வருகிறது. உலகிலேயே இதுபோல ரயில் சேவை ஓரிரு இடங்களில்தான் உள்ளன.

பாரம்பரியமிக்க இந்த ரயில் போக்குவரத்தை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவிப்பதற்கான முயற்சிகளில் தென்னக ரயில்வே, டெல்லியில் உள்ள ரயில்வேஅருங்காட்சியகம் மற்றும் ரயில்வே வாரியம் ஆகியவை இறங்கின. யுனெஸ்கோவுக்கு ஊட்டி மலை ரயில் குறித்த விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

உலக பாரம்பரிய தினம் : தமிழர்கள் கொண்டாடும் யுனெஸ்கோ அங்கீகரித்த ‘ஊட்டி மலை ரயில்’ பற்றி தெரியுமா?

இதைத்தொடர்ந்து 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிட்னியை சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் லீ என்பவரது தலைமையிலான யுனெஸ்கோ குழு ஊட்டிக்கு வந்து மலை ரயில் போக்குவரத்தை ஆய்வு செய்தது. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையில் உள்ள ரயில் பாதை, ரயில் நிலைய கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து ஊட்டி மலை ரயிலுக்கு உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தை வழங்கலாம் என்று யுனெஸ்கோவுக்கு லீ தலைமையிலான குழு பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையை ஏற்ற யுனெஸ்கோ அமைப்பு, நீலகிரி மலை ரயிலை உலக பாரம்பரியச் சின்னமாக தற்போது அறிவித்துள்ளது.

உலகின் மிகச்சிறந்த ரயில் போக்குவரத்தாக நீலகிரி மலை ரயில் உள்ளது. பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் தனித்துவத்துடன் நீலகிரி மலை ரயில் விளங்குகிறது. ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள், ரயில் நிலையங்கள் என அனைத்துமே மிக சிறப்பாகவும், தனித்துவத்துடனும் உள்ளன. எனவே இந்த ரயிலுக்கு உலக பாரம்பரியச் சின்னம் என்ற அந்தஸ்தைத் தருவது மிகப் பொருத்தமானது என்று யுனெஸ்கோஅமைப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, ஊட்டி மலை ரயிலைப் போலவே இயங்கி வரும் டார்ஜிலிங் மலை ரயிலும் உலக பாரம்பரியச் சின்னம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories