தமிழ்நாடு

"அந்த துப்பறியும் வேலையை நீங்களே செய்யலாம்.." : MLA கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன பதில்!

“சிப்காட் பூங்கா அமைக்க நிலம் இருந்தால் அரசு பரிசீலிக்கும். எனக்கு இருக்கும் வேலையை விட்டுவிட்டு நிலத்தை கண்டுபிடிக்கச் சொல்வது எல்லாம் சரியான காரியமா?” என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியுள்ளார்.

"அந்த துப்பறியும் வேலையை நீங்களே செய்யலாம்.." : MLA கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 6ஆம் தேதியில் இருந்து மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 14ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது.

இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்து துயர் தணிப்புத்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக கேள்வி நேரத்தின்போது, செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிரி, "செங்கம் தொகுதியில் உள்ள மேல் செங்கத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க அரசு முன்வரவேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "மேல் செங்கத்தில் தனியாக சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் திட்டம் இல்லை" எனத் தெரிவித்தார். பிறகு மீண்டும் ச்கிரி, "மேல் செங்கத்தில் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தது. ஒன்றிய, மாநில அரசுகள் இங்கு பண்ணை அமைத்தார்கள். இதற்குபின் இந்த நிலம் வனத்துறையிடம் சென்றது. ஆனால் தற்போது இந்த நிலம் எங்கு இருக்கிறது? யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை. இந்த நிலத்தை கண்டுபிடித்து சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க முன்வரவேண்டும்" என்றார்.

மீண்டும் பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "சிப்காட் பூங்கா அமைக்க நிலம் இருந்தால் அரசு பரிசீலிக்கும். எனக்கு இருக்கும் வேலையை விட்டுவிட்டு நிலத்தை கண்டுபிடிக்க சொல்வது எல்லாம் சரியான காரியமா? எனவே அந்த துப்பறியும் வேலையை சட்டமன்ற உறுப்பினரே செய்து நிலத்தை கண்டுபிடித்துக் கொடுத்தால் சிப்காட் பூங்கா அமைக்க அரசு பரிசீலிக்கும்" என தெரிவித்தள்ளார்.

banner

Related Stories

Related Stories