தமிழ்நாடு

கழக ஆட்சிக்கு மற்றுமொரு சாட்சி.. கணவனை இழந்த பெண்ணுக்கு ஓட்டுநர் பணி: நெகிழவைத்த திமுக நகராட்சி தலைவர்!

கணவரை இழந்த பெண்ணுக்கு பொள்ளாச்சி நகராட்சியில் தற்காலிக ஓட்டுநர் பணி வழங்கப்பட்டுள்ளது.

கழக ஆட்சிக்கு மற்றுமொரு சாட்சி.. கணவனை இழந்த பெண்ணுக்கு ஓட்டுநர் பணி: நெகிழவைத்த திமுக நகராட்சி தலைவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் மக்கள் விரோத திட்டங்களால், மக்கள் பெரிய துன்பதுயரங்களை சந்தித்து வந்தனர். இதையடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி வெற்று ஆட்சியை பிடித்தது.

முதலமைச்சராக பொறுப்பேற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பதிவி ஏற்றுக்கொண்டபோது பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவசம் என்ற கோப்பில் கையெழுத்து இட்டு தி.மு.க அரசு பெண்களுக்கான அரசு என நிரூபித்தார். இந்த ஒன்றை கையெழுத்தால் ஒன்றைய தினம் தமிழ்நாட்டில் 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயடைந்து வருகின்றனர்.

இதுமட்டுமல்லாது, ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு, மக்களைத் தேடி மருத்துவம், தொழிற்கல்விப் படிப்புகளில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதி இட ஒதுக்கீடு என பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது தி.மு.க அரசு.

மேலும், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள், சிறுபான்மையினர் என அனைத்து தரப்பு மக்களுக்கு உதவி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி, தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்க கழக அரசு தொடர்ந்து வழிவகை செய்து வருகிறது.

இந்நிலையில், கணவரை இழந்த பெண் ஒருவருக்கு நகராட்சியில் தற்காலிக ஓட்டுநராக பணிபுரிய கழக அரசால் நடவடிக்கை எடுத்துள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் கணவரை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

இதனை அறிந்து கொண்ட பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு பொள்ளாட்சி நகராட்சியில் தற்காலிக ஓட்டுநராக பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில், “தமிழகத்தில் நல்லாட்சி வழங்கி வரும் மாண்புமிகு முதல்வர் தளபதியாரின் ஆட்சிக்கு சாட்சியாக ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள கணவரை இழந்த பெண் சாந்திக்கு பொள்ளாச்சி நகராட்சியில் தற்காலிக ஓட்டுநராக பணிபுரிய நகராட்சி ஆணையரிடம் எடுத்துக்கூறி அவருக்கு வாய்ப்பளித்தேன்” என பதிவிட்டுள்ளார்.

"தி.மு.க அரசு சொன்னதை மட்டும் அல்ல சொல்லாததையும் செய்து வரும் அரசாக உள்ளது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி அனைத்து கூட்டங்களில் பேசி வருகிறார். இதை மெய்பிக்கும் விதமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories