தமிழ்நாடு

இந்தி திணிப்பு: தமிழன் தான் சொன்னான்.. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று - பேரறிஞர் அண்ணாவின் உரை!

இந்தி மொழியை இணைப்பு மொழியாகக் கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு கடந்த காலத்தில் அறிவுறுத்திய போது அண்ணா அவர்கள் ஆற்றிய உரை இணையதளங்களில் வலம் வருகிறது.

இந்தி திணிப்பு: தமிழன் தான் சொன்னான்.. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று - பேரறிஞர் அண்ணாவின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தி மொழியை இணைப்பு மொழியாகக் கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு கடந்த காலத்தில் அறிவுறுத்திய போது அண்ணா அவர்கள் ஆற்றிய உரை இணையதளங்களில் வலம் வருகிறது.

அவ்வுரை வருமாறு:-

இப்போது ஆங்கிலமும், தமிழும் நம்மிடத்தில் இருக்கின்ற நேரத்தில் இந்தியை இணைப்பு மொழியாகக் கொள்ள வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகிறார்கள். பெரியவர்கள் சொல்வதாலே, சொல்லுகிறார்கள் என்று மட்டும் சொல்லக்கூடாது; அறிவுறுத்துகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அது உண்மையிலே அறிவின்பாற் பட்டதானால், ஏற்றுக்கொள்வதில் தமிழன் எப்போதும் தயக்கம் காட்ட மாட்டான், ஏனென்றால் தமிழன் தான் சொன்னான்; ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று. ஆக`எதுவாக இருந்தாலும் என்னுடைய நாடு தான்; எல்லோருமே என்னுடைய உறவினர்கள் தான்’ என்று 3000 ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துச் சொன்னவன் தமிழ் மகன் ஒருவன்தான்.

ஆனால் இடம் உயர்ந்தது என்பதாலே, அது அறிவுடையது என்ற தத்துவத்தை தமிழன் ஒப்புக் கொள்ளமாட்டான். இவ்வாறு பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிடுகிறார்.

banner

Related Stories

Related Stories