தமிழ்நாடு

“15 ஆண்டுகளாக பெற்ற தாயை அறையில் பூட்டி வைத்த கொடூர மகன்கள்” : ஆக்‌ஷனில் இறங்கிய ஆட்சியர் - நடந்தது என்ன?

வீடு யாருக்கு என்கிற சுயநல பிரச்னையால் பெற்ற தாயை 15 ஆண்டுகளாக பரிதவிக்கவிட்ட சம்பவம் தஞ்சையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“15 ஆண்டுகளாக பெற்ற தாயை அறையில் பூட்டி வைத்த கொடூர மகன்கள்” : ஆக்‌ஷனில் இறங்கிய ஆட்சியர் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தஞ்சை காவிரிநகர் 5ம் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஞான ஜோதி. 70 வயதாகும் மூதாட்டியின் கணவர் மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இருந்தபோது இறந்துவிட்டார். இவருக்கு சண்முகசுந்தரம், வெங்கடேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் சண்முகசுந்தரம் காவல்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அவரது தம்பி வெங்கடேஷ் மத்திய அரசு பணியில் பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு சில குடும்ப சொத்து உள்ளதாக தெரிகிறது. இதனால், பிரிப்பதில் சகோதர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் வீடு உள்ளிட்ட சொத்து யாருக்கு என்கிற பிரச்னையால் பெற்ற தாயை அம்போவென விட்டுவிட்டு வீட்டின் வாயில் கதவை மகன்கள் இருவரும் பூட்டியுள்ளனர். மேலும் தாயைக் கவனிக்காமலும் இருந்துள்ளனர். அக்கம் பக்கத்தார் கொடுத்த உணவை சாப்பிட்டு 15 ஆண்டுகளாக மூதாட்டி தவித்த விட்டுள்ளனர்.

இந்நிலையில் பூட்டிக்கிடக்கும் வீட்டில் மூதாட்டி ஒருவரின் முனகல் சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், இதுகுறித்து சமூக நலத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சமூக நலத்துறையினர் மூதாட்டியின் மகன்களிடம் விசாரிக்க முயன்றுள்ளனர். அப்போது சண்முகசுந்தரம், வெங்கடேஷ் இருவரும் நலத்துறை பணியாளர்களை அலட்சியப்படுத்தி மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து, சமூகநலத்துறை அலுவலர் இந்த விவகாரத்தை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டுச் சென்றனர். விவரம் அறிந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மூதாட்டியை மீட்க காவல்துறைக்கு உத்தரட்டார்.

அந்த உத்தரவின் பேரில் போலிஸாருடன் சென்ற சமூக நலத்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மேலும் பெற்ற தாயை பராமரிக்காத 2 மகன்கள் மீதும் புகார் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க போலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். வீடு யாருக்கு என்கிற சுயநல பிரச்னையால் பெற்ற தாயை 15 ஆண்டுகளாக பரிதவிக்கவிட்ட சம்பவம் தஞ்சையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories