தமிழ்நாடு

100 பேருக்கு 100 Maruti Suzuki கார்.. ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த IT நிறுவனம்!

சென்னையை சேர்ந்த ஐ.டி நிறுவனம் ஒன்று தங்கள் ஊழியர்கள் 100 பேருக்கு காரை பரிசாக வழங்கி கவுரவித்துள்ளது.

100 பேருக்கு 100 Maruti Suzuki கார்.. ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த IT நிறுவனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது Ideas2IT என்ற தனியார் மென்பொருள் நிறுவனம். இதன் நிறுவனர் முரளி விவேகனந்தன், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார் காயத்ரி விவேகானந்தன்.

இந்நிலையில் தங்கள் நிறுவனத்தில் 5 ஆண்டுக்கு மேல் பணியாற்றி வரும் 100 ஊழியர்களுக்கு Maruti Suzuki காரை பரிசாக வழங்கி கவுரவித்துள்ளது. இந்த பரிசை பெற்ற ஊழியர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் முரளி விவேகானந்தன், "இந்தியாவிலேயே 100 ஊழியர்களுக்கு கார் பரிசாக கொடுத்து முதல் மென்பொருள் நிறுவனம் நாங்கள் தான். எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிய ஊழியர்களுக்கு வளர்சியின் ஒரு பங்கை கொடுக்கவே நாங்கள் அவர்களுக்கு காரை பரிசாக வழங்க முடிவு செய்து இதை செய்துள்ளோம். மேலும் ஊழியர்களுக்கு உதவ பல திட்டடங்களை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

அண்மையில் Kiss Flow என்ற மென்பொருள் நிறுவனம் தனது ஊழியர்கள் 5 பேருக்கு BMW காரை வழங்கியது. இதற்போது Ideas2IT என்ற நிறுவனம் தங்களின் ஊழியர்களுக்கு 100 காரை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories