தமிழ்நாடு

பிரசவத்தின்போது உள்ளுறுப்பில் ரத்தக்கசிவு.. இளம் பெண்ணின் உயிரை பாப்பாற்றிய ஓமந்தூரார் மருத்துவர்கள் !

உள்ளுறுப்புகளில் ரத்தக் கசிவு ஏற்பட்ட இளம் பெண்ணின் உயிரை ஓமந்தூரார் மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

பிரசவத்தின்போது உள்ளுறுப்பில் ரத்தக்கசிவு.. இளம் பெண்ணின் உயிரை பாப்பாற்றிய ஓமந்தூரார் மருத்துவர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கீர்த்தனா. இளம் பெண்ணான இவருக்கு கடந்த மார்ச் 10ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு குறைமாதத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அவருக்கு உதிரப்போக்கு அதிகமாக இருந்துள்ளது.

உடனே அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு எண்டோஸ்கோபி பரிசோதனை செய்தபோது ஜீரண மண்டலத்தில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்தபோது பெண்களுக்கு அரிதினும் அரிதாக ஏற்படக்கூடிய உள்ளுறுப்பு சிதைப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து நவீன அறுவை சிகிச்சை மூலம் அவரின் ரத்த கசிவை மருத்துவர்கள் நிறுத்தியுள்ளனர். தற்போது அவர் பூரண நலமுடன் உள்ளார். இதுபோன்ற ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனையில் செய்வது இதுவே முதல்முறையாகும். மேலும் இத்தகைய அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories