தமிழ்நாடு

விளையாடிக் கொண்டிருந்த இரட்டையரில் ஒரு பெண் குழந்தைக்கு நேர்ந்த கதி.. மாதவரம் அருகே மூண்ட சோகம்!

இரட்டை பெண் குழந்தைகளில் ஒன்று பாம்பு கடித்து உயிரிழந்ததால் சோகத்தில் மூழ்கிய மாதவரம் பகுதியினர்.

விளையாடிக் கொண்டிருந்த இரட்டையரில் ஒரு பெண் குழந்தைக்கு நேர்ந்த கதி.. மாதவரம் அருகே மூண்ட சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாதவரத்தில் சிறுமியை பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

சென்னை மாதவரம் கண்ணபிரான் கோவில் தெருவை சேர்ந்த சுதாகர் (42). இவர் மரக் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அஸ்வினி இவர்களுக்கு 6 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளது .

இவர்களில் டார்லியா (6) என்ற குழந்தை அருகில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் வீட்டு முற்றத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது பாம்பு ஒன்று டார்லியாவை கடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் உடல் முழுவதும் விஷம் ஏறி வலியால் துடித்த குழந்தையை பெற்றோர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் குழந்தை இறந்து விட்டது. தகவலறிந்த போலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் காளிராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். பெற்றோர்களுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்து அதில் ஒன்றை இழந்து வாடுவதால் அப்பகுதி மக்கள் இச்சம்பவத்தால் மிகவும் சோகத்தில் காணப்பட்டனர்.

banner

Related Stories

Related Stories