தமிழ்நாடு

“கூல்ட்ரிங்க்ஸில் மதுபானத்தை கலந்து குடித்த கல்லூரி மாணவிகள்” : 5 பேரை சஸ்பெண்ட் செய்த கல்லூரி நிர்வாகம்!

குளிர்பானத்தில் வெளி மாநில மதுபானத்தை கலந்து குடித்த கல்லூரி மாணவிகள் உட்பட 5 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“கூல்ட்ரிங்க்ஸில் மதுபானத்தை கலந்து குடித்த கல்லூரி மாணவிகள்” : 5 பேரை சஸ்பெண்ட் செய்த கல்லூரி நிர்வாகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தனியார் கல்லூரி மாணவிகள் குளர்பானத்தில் வெளி மாநில மதுபானத்தை கலந்து குடிக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

செங்கல்பட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு பள்ளி மாணவிகள் பேருந்தில் மது அருந்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் கல்லூரியில் மதுபானம் குடித்த விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவிகள் நான்கு பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கல்லூரி மாணவிகளுக்கு உடன் படிக்கும் ஆண் நண்பர் மதுபானம் வாங்கிக் கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories