தமிழ்நாடு

பள்ளி மாணவியை கடத்த திட்டம்.. வீதியில் உலா வந்த 4 பேரை மடக்கிப் பிடித்த போலிஸ் - பின்னணி என்ன?

பள்ளி மாணவியை கடத்த முயற்சி செய்த 4 வாலிபர்களை போலிஸார் கைது செய்தனர்.

பள்ளி மாணவியை கடத்த திட்டம்..  வீதியில் உலா வந்த 4 பேரை மடக்கிப் பிடித்த போலிஸ் - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராமநாதபுரம் மாவட்டம், காக்கூர் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவிக்கு சதீஷ் என்ற இளைஞரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதையடுத்து இருவரும் தொலைபேசியில் பேசி பழகிவந்துள்ளனர். இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் மாணவியை கடத்திச் செல்ல சதிஷ் மற்றும் அவரது நண்பர்கள் திட்டமிட்டு மாணவியின் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்து வந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை அடுத்து மாணவியின் குடியிருப்பு பகுதியில் சுற்றியிருந்த சதீஷ், மணிபாரதி, அஜித்குமார், பிரபு ஆகிய 4 பேரை போலிஸார் பிடித்து விசாரணை செய்தனர். இதில், மாணவிக்கு ஆசை வார்த்தைகளை கூறி கடத்த முயன்றது உறுதியானதை அடுத்து நான்குபேர் மீது போலிஸார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories