தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கையை வகுக்க புதிய குழு அமைப்பு: குழுவின் தலைவர், உறுப்பினர்கள் யார் யார்?

தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைப்பு

தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கையை வகுக்க புதிய குழு அமைப்பு: குழுவின் தலைவர், உறுப்பினர்கள் யார் யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் விவரம் வருமாறு:

தலைவர்: டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன்

உறுப்பினர்கள்: பேராசிரியர் எல். ஜவஹர்நேசன், முன்னாள் துணைவேந்தர், சவீதா பல்கலைக்கழகம்

இராமானுஜம், ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர், தேசிய கணித அறிவியல் நிறுவனம்

பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்

பேராசிரியர் திரு. இராம சீனுவாசன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்

முனைவர் அருணா ரத்னம், மேனாள் சிறப்புக் கல்வி அலுவலர், யூனிசெப் நிறுவனம்

எஸ்.இராமகிருஷ்ணன், எழுத்தாளர்

விஸ்வநாதன் ஆனந்த், உலக சதுரங்க சாம்பியன்.

டி.எம்.கிருஷ்ணா, இசைக் கலைஞர்

துளசிதாஸ், கல்வியாளர்

முனைவர் ச.மாடசாமி, கல்வியியல் எழுத்தாளர்

இரா.பாலு, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிச்சான்குப்பம், நாகப்பட்டினம் மாவட்டம்

ஜெயஸ்ரீ தாமோதரன், அகரம் அறக்கட்டளை

இக்குழுவானது புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories