தமிழ்நாடு

சென்னையில் 2,000 பேருந்துகளில் CCTV கேமரா.. பெண்கள் பாதுகாப்புக்காக அமைச்சர் சிவசங்கர் அதிரடி உத்தரவு!

போக்குவரத்து துறை அமைச்சர் போக்குவரத்து துறைக்கு என்று தனி கட்டுப்பாட்டு அறை அமைக்க அத்துறை திட்டமிட்டுள்ளது.

சென்னையில் 2,000 பேருந்துகளில் CCTV கேமரா.. பெண்கள் பாதுகாப்புக்காக அமைச்சர் சிவசங்கர் அதிரடி உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் 2000 பேருந்துகளில் பயணிகளின் முகங்களை அறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கேமராக்கள் பொருத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள அமைச்சர் சிவசங்கர், விரைவில் சென்னையில் வலம் வரும் 2000 பேருந்துகளில் பயணிகளின் முகங்களை அறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

புதிய பேருந்துகள் வாங்குவது தொடர்பாக ஜெர்மன் நாட்டு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், அதில் உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் புதிய பேருந்துகளுக்கான உதிரி பாகங்கள் வாங்க‌‌‌‌ப்பட உள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும், மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட போதிலும், தற்போது பேருந்து கட்டணம் உயர்த்த வாய்ப்பில்லை எனக் கூறிய அமைச்சர் சிவசங்கர், தமிழகத்தில் எலக்ட்ரிக் பைக்குகளில் ஏற்படும் திடீர் தீ விபத்துகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் அறிக்கை அளிக்க போக்குவரத்து ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுபோக, பேருந்து பயணம், பயணத்தில் ஏற்படும் இடர்பாடுகள்உள்ளிட்ட பல்வேறு காரணங்களை புகாராக தெரிவிக்க துறைக்கு என்று கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்துகளில் பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்கள், அவசரகால பட்டன்கள் ஆகிய அனைத்தும் கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். திட்டம் செயல்படுத்தப்படும் போது எளிதாக புகார்களை தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories