தமிழ்நாடு

“அரசியல் தூண்டுதலால் என் மீது பொய் புகார்.. விசாகா கமிட்டி விசாரணை தேவை” : ஜாகிர் உசேன் கடிதம்!

கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன், பரத நாட்டிய ஆசிரியையின் புகார் குறித்து விசாகா கமிட்டி விசாரணையைக் கோரியுள்ளார்.

“அரசியல் தூண்டுதலால் என் மீது பொய் புகார்.. விசாகா கமிட்டி விசாரணை தேவை” : ஜாகிர் உசேன் கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பிரபல பரத நாட்டியக் கலைஞரான ஜாகிர் உசேன், ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியது அப்போது விவாதமானது. பின்னர், தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறையில் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக நியமனம் செய்யப்பட்டார் ஜாகிர் உசேன்.

இந்நிலையில், கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன் மீது கரூர் மாவட்ட இசைப்பள்ளியைச் சேர்ந்த பரத நாட்டிய ஆசிரியை ஒருவர், பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கலை பண்பாட்டு இயக்கக இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார் கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன். அதில் பரத நாட்டிய ஆசிரியையின் புகார் குறித்து விசாகா கமிட்டி விசாரணையைக் கோரியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் வரிசைப்படுத்தப்பட்டபடி சரியான வகையில் கற்பிக்கப்படாதது கண்டறியப்பட்டது.

“அரசியல் தூண்டுதலால் என் மீது பொய் புகார்.. விசாகா கமிட்டி விசாரணை தேவை” : ஜாகிர் உசேன் கடிதம்!

இதுகுறித்து தலைமை ஆசிரியர் அறையில் அவர் முன்னிலையில் ஆசிரியரிடம் விளக்கம் கோரப்பட்டது. ஆனால் ஆசிரியையிடமிருந்து ஒழுங்கான விளக்கம் கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில், பரதநாட்டிய ஆசிரியை அரசியல் தூண்டுதலின் பேரில் சில வெளி அமைப்புகளுடன் கைகோர்த்து என்னை போன்ற சிறுபான்மையினர் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறேன். விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

banner

Related Stories

Related Stories