தமிழ்நாடு

பாரில் அனுமதி மறுத்ததால் ஆத்திரம்.. பிரபல நட்சத்திர ஹோட்டல் ஊழியர்களை கதிகலங்க வைத்த இளைஞர்!

நட்சத்திர ஹோட்டலில் மது அருந்த அனுமதி மறுத்ததால், ஆத்திரத்தில் காரால் ஹோட்டலின் கேட்டை இடித்துத் தள்ளிய நபரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

பாரில் அனுமதி மறுத்ததால் ஆத்திரம்.. பிரபல நட்சத்திர ஹோட்டல் ஊழியர்களை கதிகலங்க வைத்த இளைஞர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை, கிண்டியில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்று உள்ளது. இங்கு உள்ள பாருக்கு மது குடிக்க இளைஞர் ஒருவர் காரில் வந்துள்ளார். அப்போது அவருக்கு வயது குறைவாக இருந்ததால் அவரை அங்கிருந்த ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.

இதனால் அந்த இளைஞர் அங்கிருந்த ஊழியர்களிடம், உள்ளே அனுப்புமாறு கூறி தகராறு செய்துள்ளார். இருப்பினும் அவர்கள் அவரை உள்ள அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது காரை அந்த ஹோட்டலின் கேட் மீது வேகமாக மோதியுள்ளார்.

இதில் கேட் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. அதேபோல் காரின் முன்பகுதியும் கடுமையாகச் சேதமடைந்தது. இளைஞரின் இந்தச் செயலால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டர். இதில், அந்த இளைஞர் முகப்பேர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் என்பது தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories