தமிழ்நாடு

“கணவன் - மாமியாரை திட்டம் போட்டுக் கொலை செய்த மனைவி” : விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ சம்பவம் !

திண்டுக்கலில் கணவன், மாமியாரை கொலை செய்த மனைவியை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“கணவன் - மாமியாரை திட்டம் போட்டுக் கொலை செய்த மனைவி” : விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ சம்பவம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (40). இவர் அதே பகுதியில் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை செல்வராஜூம் அவரது தாயார் சௌந்தரம்மாளும் கொடூரமாக வெட்டி கொலைசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த எரியோடு போலிஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலிஸார் , 5 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை தேடும் பணியை மேற்கொண்டனர்.

விசாரணையில் உயிரிழந்த செல்வராஜின் மனைவி சுபாஹாசினி என்பவர் மீது சந்தேகம் அடைந்த போலிஸார், அவரை பிடித்து விசாரிக்கையில், சுபஹாசினி அதேபகுதியைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவருடன் பழகி வந்துள்ளார்.

இருவரும் சேர்ந்து பணத்திற்கு ஆசைப்பட்டு, செல்வராஜூவையும் அவரது தாயாரையும் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து, போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணத்தை மீறிய உறவு காரணமாக கணவரையும் மாமியாரையும் திட்டம் போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories