தமிழ்நாடு

சோப்பை கூட விட்டுவைக்காத நிலை.. சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் விலைவாசி உயர்வு -அதிர்ச்சி தகவல்!

சோப் விலையும் என அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.

Modi
Modi
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க இரண்டாவது முறை ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னதாக தனது வழக்கமான பொய்வாக்குறுதிகளை இந்த முறையும் அறிவித்தது. அந்தவகையில், பா.ஜ.க அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமானது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவோம் என்பதுதான்.

ஆனால் பா.ஜ.க அளித்த வாக்குறுதிகளை எப்போதுமே நிறைவேற்றாது என்பதற்கு தற்போது அதிகரித்து வரும் விலைவாசியே மிகப்பெரிய சாட்சி. மக்களின் அடிப்படை வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையையும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

அதுமட்டுமல்லாது விலை உயர்வைக் கட்டுப்படுத்தப் போவதாக அறிவித்து அதற்கு நேர்மாறாக மூன்று வேளாண் சட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்கள் மூலம் விலைவாசி கட்டுப்படுத்தப்படும் என்று அறிவித்த மறுவாரமே எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

இந்நிலையில், சோப் விலையும் என அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. முன்னணி நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் குளியல் சோப், துணி துவைப்பதற்கான சோப் உள்ளிட்ட சோப்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

இதன்படி ஹிந்துஸ்தான் யூனிலீவரின் சோப் பிராண்டுகளான லக்ஸ், சர்ஃப் எக்ஸல், ரின் ஆகிய சோப்களின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே டவ், லைஃப்பாய் ஆகிய சோப்களின் விலையை கடந்த பிப்ரவரி மாதம் அந்நிறுவனம் உயர்த்தியது. அதேபோல், ஃபேஸ்வாஷ் விலையையும் சுமார் 9% உயர்த்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories