தமிழ்நாடு

இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 67 ஆண்டு சிறை.. மகிளா நீதிமன்றம் அதிரடி!

பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபருக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றம் 67 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.

இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 67 ஆண்டு சிறை.. மகிளா நீதிமன்றம் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி பேபிஷாலினி. இந்த தம்பதிக்கு இரட்டையர் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இக்குழந்தைகளுக்கு பிகராஷ் என்ற வாலிபர் கடந்த 2020ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்து இதை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார்.

இது குறித்து குழந்தைகள் இருவரும் தாயிடம் கூறியுள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலிஸார் பிரகாஷை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில், பிரகாஷ் குழந்தைகளுக்கு வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டதால், மூன்று பிரிவுகளின் கீழ் தலா 20 வருடங்கள், ஒரு பிரிவின் கீழ் 7 வருடங்கள் என மொத்தம் 67 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories