தமிழ்நாடு

“ஆசை ஆசையாய் வாங்கிய எலக்ட்ரிக் பைக் - சார்ஜ் செய்யும்போது நடந்த விபரீதம்”: தீயில் கருகி தந்தை, மகள் பலி!

வேலூரில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் திடீரென வெடித்ததால் போட்டோகிராப்பர் அவரது மகளும் சம்பவ இடத்திலேயே கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஆசை ஆசையாய் வாங்கிய எலக்ட்ரிக் பைக் - சார்ஜ் செய்யும்போது நடந்த விபரீதம்”: தீயில் கருகி தந்தை, மகள் பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வேலூர்மாவட்டம்,வேலூர் சின்ன அல்லாபுரம் பலராமன் தெருவில் வசிப்பவர் போட்டோகிராப்பர் துரைவர்மா (49). இவரது மகள் மோகன பிரீத்தி (13) போளூர் அரசு பள்ளியில் பயின்று வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு புதியதாக எலெக்டிரிக்கல் பேட்டரியில் ஓடும் எலெக்ட் ரானிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கினார்.

அதனை இன்று விடியற்காலை வீட்டினுள் நிறுத்தி ரீசார்ஜ் செய்ய முயன்ற போது அந்த பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. இதனால் அருகிலிருந்த மற்ற இரண்டு சக்கர வாகனங்களும் தீப்பற்றியதால் இந்த தீயில் துரைவர்மாவும் அவரது மகள் மோகன பிரீத்தியும் சம்பவ இடத்திலேயே தீயில் சிக்கி உடல் கருகி பலியானார்கள்.

இதுகுறித்து வேலூர் தெற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இரண்டு கருகிய உடல்களையும் உடற்கூறு ஆய்வுக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் வாங்கிய புதிய எலெக்ட்ரானிக் ஸ்கூட்டரில் சிக்கி தந்தையும் மகளும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories