தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமையில் வேறு சிலருக்கு தொடர்பு? - 8 பேரின் வீடுகளில் CBCID போலிஸார் அதிரடி சோதனை!

இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரின் வீடுகளுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று சிபிசிஐடி காவல்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டது.

பாலியல் வன்கொடுமையில் வேறு சிலருக்கு தொடர்பு? - 8 பேரின் வீடுகளில் CBCID போலிஸார் அதிரடி சோதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரின் வீடுகளுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டது சிபிசிஐடி காவல்துறை.

விருதுநகர் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி காவல்துறை நேற்று முதல் துவங்கியது. விசாரணை சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி முத்தரசி மேற்பார்வையிலும் டி.எஸ்.பி வினோதினி தலைமையிலும் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது சிபிசிஐடி காவல்துறை.

முதல்கட்டமாக நேற்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று, கைது செய்யப்பட்ட 8 பேரின் வீடுகளில் சிபிசிஐடி காவல்துறை அதிரடியாக சோதனை நடத்தியுள்ளது.

இரு சக்கர வாகனங்களில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்ற சிபிசிஐடி போலிஸார் கைது செய்யப்பட்ட ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் வீடுகளிலும் தனித்தனியாக சோதனை செய்தனர்.

பாலியல் வன்கொடுமையில் வேறு சிலருக்கு தொடர்பு? - 8 பேரின் வீடுகளில் CBCID போலிஸார் அதிரடி சோதனை!

8 பேரின் பெற்றோர், உடன் பிறந்தோர், உறவினர்களிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலிஸார் வீட்டில் இருந்த செல்போன், பென் ட்ரைவ், மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை ஆய்வு செய்துள்ளனர். மேலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இடங்களில் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதாக நேற்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் யார் யார் என்பது குறித்த மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

banner

Related Stories

Related Stories