தமிழ்நாடு

ஓடிக்கொண்டிருந்த போதே தீப்பற்றி எரிந்த கார்; அலறியடித்து ஓடிய ஓட்டுநர்; ராயபுரத்தில் பரபரப்பு!

ராயபுரத்தில் மெயின் ரோட்டில் காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

ஓடிக்கொண்டிருந்த போதே தீப்பற்றி எரிந்த கார்; அலறியடித்து ஓடிய ஓட்டுநர்; ராயபுரத்தில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை ராயபுரம் கிழக்கு கல்மண்டபம் சாலையில் அர்த்தூண் ரோடு அருகே நான்கு சக்கர வாகனம் வந்து கொண்டிருந்த பொழுது திடீரென காரின் முன்புறம் தீப்பற்றி எரிய தொடங்கியதால் காரை ஓட்டிய நபர் அலறி அடித்துக் கொண்டு காரை விட்டு வெளியேறினார்

பின்னர் இச்சம்பவம் தொடர்பாக தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக விரைந்து வந்த ராயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழுவினர் உடனடியாக காரின் முன்புறம் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்

ஓடிக்கொண்டிருந்த போதே தீப்பற்றி எரிந்த கார்; அலறியடித்து ஓடிய ஓட்டுநர்; ராயபுரத்தில் பரபரப்பு!

உடனடியாக தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக ராயபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

முதல்கட்ட விசாரணையில் ஹோண்டா i10 கார் சுபாஷ் என்பவருக்கு சொந்தமானது என்றும் ராயபுரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பழுது பார்ப்பதற்காக ஒப்படைத்திருந்ததாகவும் பழுது பார்த்துக் கொண்டிருந்த பொழுது காரை ஓட்டி பார்ப்பதற்காக மெக்கானிக் சுப்பிரமணி என்பவர் காரை ஓட்டி வந்தபோது காரின் முன்புறமுள்ள பேட்டரியில் இருந்து திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியதாகவும் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories