தமிழ்நாடு

“5 வயது சிறுவன் மற்றும் 75 வயது மூதாட்டியை கொடூரமாக வெட்டி கொலை செய்த இளைஞர் கைது” : போலிஸ் விசாரணை !

திருப்பெரும்புதூர் அருகே பட்டுநூல் சாத்திரத்தில் 5 வயது சிறுவன் மற்றும் 75வயது மூதாட்டியை வெட்டிய வாலிபர் கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

“5 வயது சிறுவன் மற்றும் 75 வயது மூதாட்டியை கொடூரமாக வெட்டி கொலை செய்த இளைஞர் கைது” : போலிஸ் விசாரணை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருப்பெரும்புதூர் அருகே பட்டுநூல் சத்திரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். (23). செய்யாறு பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் சுகுணா மற்றும் சுகுணாவின் 75 வயது தாய் நாகம்மாள் இவர்களுடன் திருப்பெரும்புதூரில் பட்டுநூல் சத்திரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்கள்.

ரஞ்சித்குமார் சுகுணா இருவரும் வேலைக்கு சென்று இருந்த நிலையில், இன்று யுவராஜ் வீட்டில் தனியாக இருந்த 75 வயது மூதாட்டி நாகம்மாள் மற்றும் 5 வயது சிறுவன் புவியரசு ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

பலத்த காயமடைந்த இருவரையும் பொதுமக்கள் திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனையில், அனுமதித்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துமனை கொண்டு செல்லப்பட்டனர். இருவரையும் வெட்டி விட்டு தப்பி ஓடிய யுவராஜை போலிஸார் கைது செய்து, கொலை குறித்த காரணங்களை விசாரணை செய்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories