தமிழ்நாடு

20 கோடியில் வள்ளலார் காப்பகங்கள்: விபத்துகளை தடுக்க..உயிர்களை காக்க.. தமிழகத்துக்கு மிகத்தேவையான திட்டம்!

உழவர்களும் பொது மக்களும் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரிடையேயும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

20 கோடியில் வள்ளலார் காப்பகங்கள்: விபத்துகளை தடுக்க..உயிர்களை காக்க.. தமிழகத்துக்கு மிகத்தேவையான திட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடப்பு நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தாக்கல் செய்திருக்கிறார் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

அதேபோல நேற்று நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.

உழவர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் செழிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரிடையேயும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

அந்த வகையில், “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பல்லுயிர் ஓம்பிய வள்ளலார் அவர்களின் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவில்லாத கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப் பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதற்கு “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” என்னும் புதிய திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆதரவற்ற, கைவிடப்பட்ட மாடுகள், ஆடுகள் மற்றும் செல்லப் பிராணிகள் அனைத்தும் இந்த திட்டத்தின் மூலம் பராமரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வள்ளலார் காப்பக திட்டத்தால், சாலைகளில் பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க வழிவகுக்கும் எனவும் கருத்துகள் கூறப்பட்டு வருகிறது.

முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாநகராட்சி நிர்வாகங்களால் உணவு நேரம் போக மற்ற நேரங்களில் கால்நடைகளின் உரிமையாளர்கள் தத்தம் மாடுகள், ஆடுகளை சாலையில் சுற்றித் திரிய விட்டால் அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படுவதோடு தொடர்ந்து அவ்வாறு சுற்றித்திரியவிட்டால் கால்நடைகளை பறிமுதல் செய்து சந்தையில் விற்பனை செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories