தமிழ்நாடு

மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட ராம சமாஜ் அமைப்பு? சென்னை ஐகோர்ட் அதிரடி ஆணை!

மேற்கு மாம்பலத்தின் பழம்பெரும் மண்டபமான அயோத்யா மண்டபத்தை இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட ராம சமாஜ் அமைப்பு? சென்னை ஐகோர்ட் அதிரடி ஆணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா மண்டபம் 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த மண்டபத்தை ஆரம்பத்தில் நிர்வகித்து வந்த இராம சமாஜம் அமைப்பு பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து, தமிழக அரசு ஆணையின் படி, அயோத்யா மண்டபத்தை கடந்த 2014ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கீழ் வந்தது.

மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட ராம சமாஜ் அமைப்பு? சென்னை ஐகோர்ட் அதிரடி ஆணை!

இதனை எதிர்த்து , இராம சமாஜம் அமைப்பு சார்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கு நீதிபதி V.M வேலுமணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய நலத்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் யஷ்வந்த், மண்டபத்தில் ஆஞ்சநேயர் சிலை வைத்து அபிஷேகம் , ஆராதணை செய்து வழிபாடு நடத்தப்படுவதாகவும் பொதுமக்களும் அதிக அளவில் வருவதாகவும், எனவே இந்து அறநிலைத்துறை சட்டத்தின் படி, சிலை வைத்து வழிப்பாடு நடைபெறுவதால் இந்த மண்டபம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி ராம சமாஜம் சார்பில் தொடரப்பட்ட மனு நிலைக்கதக்கதல்ல என்று தெரிவித்த நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories