தமிழ்நாடு

“பட்ஜெட்டில் அறிவிப்பதற்கு முன்பே இடம் ஆய்வு” : இது கிடப்பில் போடும் அ.தி.மு.க ஆட்சி அல்ல.. தி.மு.க அரசு!

பட்ஜெட்டில் அறிவிப்பதற்கு முன்பே திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளை தி.மு.க அரசு மேற்கொண்டது வரவேற்பைப் பெற்றுள்ளது.

“பட்ஜெட்டில் அறிவிப்பதற்கு முன்பே இடம் ஆய்வு” : இது கிடப்பில் போடும் அ.தி.மு.க ஆட்சி அல்ல.. தி.மு.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பட்ஜெட்டில் அறிவிப்பதற்கு முன்பே திட்டத்திற்கான இடம் தேர்வு, ஆய்வுப் பணிகளை தி.மு.க அரசு மேற்கொண்டது வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் இளைஞர்கள் நலனுக்காகவும், விளையாட்டுத் துறையையும், வீரர்களையும் ஊக்குவிக்கும் நோக்கிலும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

பட்ஜெட்டில், பல்வேறு விளையாட்டுகளுக்குப் புகழ்பெற்ற வடசென்னையில், இளைஞர்களின் திறனை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், சிறந்த விளையாட்டு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளுடன் கூடிய விளையாட்டு வளாகம் ஒன்றை அரசு உருவாக்கும். என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைப்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கபடி, உள்ளரங்க விளையாட்டுகள் மற்றும் நவீன உடற்பயிற்சிக்கூட வசதிகளுடன், சென்னை இராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் செலவில் இவ்வளாகம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் இத்திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, கடந்தாண்டு இறுதியிலேயே இதற்கான இடம் தேர்வு உள்ளிட்ட ஆய்வுப் பணிகள் தொடங்கி விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் பட்ஜெட்டில் திட்டங்களை அறிவித்துவிட்டு, கிடப்பில் போடப்பட்டு வந்த நிலையில், பட்ஜெட்டில் அறிவிப்பதற்கு முன்பே திட்டத்திற்கான இடம் தேர்வு, ஆய்வுப் பணிகளை தி.மு.க அரசு மேற்கொண்டது வரவேற்பைப் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories