தமிழ்நாடு

விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. குற்றவாளி மீது பாய்ந்தது போக்சோ!

மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்த விடுதி காப்பாளரை போலிஸார் கைது செய்தனர்.

விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. குற்றவாளி மீது பாய்ந்தது போக்சோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவண்ணாமலை மாவட்டம், பத்தியாவரம் கிராமத்தில் உள்ள சூசைநகர் பகுதியில் அரசு நிதியுதவி பெறும் ஆண்கள் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

அந்தப் பள்ளியில் படிக்கும் 113 மாணவர்கள் அருகே இருக்கும் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கிருக்கும் சில மாணவர்கள், விடுதியின் துணை காப்பாளர் துரைப்பாண்டி என்பவர் பாலியல் தொல்லை கொடுப்பதாகத் திருவண்ணாமலை சமூக நலத்துறை இணையதளத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரை அடுத்து சம்மந்தப்பட்ட மாணவர்களைக் குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்து சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் விடுதி காப்பாளர் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

பின்னர் இது குறித்து சேத்துப்பட்டு காவல்நிலைத்தில சமூகநலத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து துரைப்பாண்டியை போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories