தமிழ்நாடு

பொதுமக்களுக்கும் இடையூறாக ‘பைக் ஸ்டண்ட்’ செய்த இளைஞர்கள்.. சினிமா பாணியில் ‘செக்’ வைத்த போலிஸ்!

மங்களூர் மாநகர போலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு செய்து சாகசங்கள் செய்து பைக்குகளை ஓட்டி மிரட்டிய நபர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.

பொதுமக்களுக்கும் இடையூறாக ‘பைக் ஸ்டண்ட்’ செய்த இளைஞர்கள்.. சினிமா பாணியில் ‘செக்’ வைத்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மங்களூர் மாநகர போலிஸ் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பல்வேறு விதமான முக்கிய சாலைகளில், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு செய்து சாகசங்கள் செய்து பைக்குகளை ஓட்டி மிரட்டிய நபர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.

மங்களூர் பகுதியில் பைக் ஸ்டண்ட் செய்த 4 பேரை மங்களூரு நகரின் (தெற்கு) போக்குவரத்து நிலைய காவல்நிலையத்தில் குற்றச்சாட்டு வந்துள்ளது. ஸ்டண்ட் செய்ய 5 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இல்யாஸ் ஜீயன் என்ற நபர் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளுடன் மேலும் இருவர் வீதிகளில் இருந்ததாக கூறப்படுகிறது.

அவர் மார்ச் 1 முதல் 6 வரை இந்த வழியில் ஒரு சாலையில் தனது மோட்டார் சைக்கிளை ஆபத்தான முறையில் ஓட்டுவதும், வீலிங் ஸ்டண்ட் செய்வதும், இரு சக்கர வாகனத்தில் குறுக்கு வழியில் சவாரி செய்வதும், மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு ஆபத்தை வகையில் வாகனங்களை இயக்கியுள்ளார்.

பொதுமக்களுக்கும் இடையூறாக ‘பைக் ஸ்டண்ட்’ செய்த இளைஞர்கள்.. சினிமா பாணியில் ‘செக்’ வைத்த போலிஸ்!

இதனையடுத்து மார்ச் 10 அன்று, அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த சாகசங்களின் வீடியோவை பதிவேற்றினார். இந்த வீடியோ வைரலானதையடுத்து, பலரும் இதை விமர்சித்துள்ளனர். வீலிங் ஸ்டண்ட் குறித்தபுகாரின்பேரில் இல்யாஸ் ஜீயன் மற்றும் சஃப்வானின் வீடியோ வைரலானது

இதனையடுத்து கடந்த 10ம் தேதி அடையாறு தௌசீப் முகமது மற்றும் முகமது அனீஸ் ஆகியோர் பைக்குகளை ஆபத்தான முறையில் ஓட்டிக்கொண்டும், வீலிங் செய்தும் வந்தனர். உல்லால் நகர மாணவர்களும், வாமஞ்சூர் பகுதியில் வாகனத்தை ஓட்டிச் சென்ற முஹம்மது அனீசும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதால், அவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மங்களூர் மாநகர போலிஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மங்களூர் மாநகர போலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் தற்போது கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மோட்டார் விதிகளை மீறிச் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

banner

Related Stories

Related Stories