தமிழ்நாடு

“கெத்தான CM-ஆக இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. உங்களுக்கு ஒரு சல்யூட்” : நடிகை சங்கீதா புகழாரம்!

மகளிருக்கு முக்கியத்துவம் தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி என்று நடிகை சங்கீதா புகழாரம் சூட்டியுள்ளார்.

“கெத்தான CM-ஆக இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. உங்களுக்கு ஒரு சல்யூட்” : நடிகை சங்கீதா புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கழகத் தலைவரும் - தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா - சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், “மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள்” எனும் தலைப்பில் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு நிகழ்வுகளாக நடைபெற்றுவருகின்றன. இந்நிகழ்வுகளை - மாவட்டச் செயலாளரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு முன்னின்று வெகு சிறப்பாக நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் (10.3.2022) அம்பத்தூர் வடக்குப் பகுதியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறி ஞர் பி.கே.மூர்த்தி எம்.சி. தலைமையில் “முத்தமிழ் அரங்கம்” எனும் கருத்தரங்க நிகழ்வாக நடை பெற்றது.

இதில் - வட்டச் செயலாளர் வெ.இராதாகிருஷ்ணன் வரவேற்பு ரையாற்றினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவில்,முதல் முறையாக அரசியல் மேடையில் பங்கேற்று சிறப்பானதோர் உரையாற்றினார் நடிகை சங்கீதா. அவரது உரை வருமாறு:-

மேடையில் இருக்கின்ற பெரியவர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் தொடக்கத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன், எனக்கு நிஜமாகவே பேசத்தெரியாது என்று. ஆனால், யாரும் நம்பமாட்டேன் என்கிறார்கள்; உண்மையாகவே எனக்குப் பேசத் தெரியாது. இங்கே பேசியவர்களின் பேச்சுத்திறமைக்கு முன், எவ்வளவுதான் பயிற்சி எடுத்தாலும் அந்தத்திறமை வராது.

ஒரு விஷயத்தை நான் கண்டிப்பாக சொல்ல வேண்டும்; நீங்கள் எல்லாம் நினைக்கலாம்; எனக்கும், இந்தப் பிறந்த நாள் விழாவிற்கும்என்ன சம்பந்தம்? எனக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் என்ன சம்பந்தம்?எதற்காக இந்த விழாவிற்கு வந் திருக்கிறார்கள்? என்று நீங்கள் எல்லாம் நினைக்கலாம். அதையேதான் நானும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இங்கே நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்; இந்த இடத்திற்கும், நமக்கும் என்ன சம்பந்தம் என்றுநினைத்துக் கொண்டிருக்கிறேன்.

என்னிடம் இருக்கும் ஒரு பழக்கம் என்னவென்றால், மனதில் என்ன தோன்றுகிறதோ, அதை அப்படியே பேசிவிடுவேன்; உண்மையைமட்டும் தான் பேசுவேன். அந்த உண்மையை தைரியமாகப் பேசுவதற்கு எனக்கு இன்றைக்குத் தான் வந்திருக்கிறது.அதற்கு முக்கிய காரணம், தி.மு.க. ஆட்சிதான். என் மனதில் என்ன பட்டாலும், ஒரு பெண்ணாக நான் பேசலாம். அது என்னவாக இருந்தாலும், அதற்காக எனக்கு மரியாதை கொடுக்கப்படும். நான் ஒரு நடிகையாக இருந்தாலும் சரி, இல்லையானாலும் சரி - அதற் குண்டான மரியாதை எனக்குக் கொடுக்கப்படும். அதற்கான தண்ட னையோ, பழிவாங்க நோக்கமும் இந்த ஆட்சியில் என்றைக்குமே இருந்தது கிடையாது. சேகர்பாபு அண்ணன் சொன் னது போன்று, என்னை 20 ஆண்டுகளாக அழைத்துக் கொண்டிருக் கிறார்கள்.

“இல்லீங்க அண்ணே, வேண்டாம்” என்று சொன்னேன். இந்த மேடைதான் நான் முதன் முதலாக வந்து நிற்கின்ற அரசியல் மேடையாகும். அதற்காக அண்ணன் சேகர்பாபு அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உலக மகளிர் நாள் விழா வினையும், முதலமைச்சர் ஸ்டாலின் அய்யா அவர்களுடைய பிறந்தநாள் விழா வினையும் இணைத்து வெகு சிறப்பாக ஒரு மாத காலத் திற்குக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், இது எவ்வளவு பெரிய விஷயம். அதற்காக ஒரு சல்யூட் உங்களுக்கு.

“கெத்தான CM-ஆக இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. உங்களுக்கு ஒரு சல்யூட்” : நடிகை சங்கீதா புகழாரம்!

அண்ணன் சேகர்பாபு அவர்கள் ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் தான் தூங்குவார் என்றுகேள்விப் பட்டு இருக் கிறேன். அண்ணே, அப்படியா? நான்கு மணிநேரம் தூங்கு வாராம்! ஏனென்றால், இவரை எந்த இடத்தில் பார்த்தாலும், வடிவேலு அண்ணன் சொல்வது போன்று மின்னல் போன்று வருவார் - இப்படி வருவார் - அப்படி போய் விடுவார். என்னங்க, சேகர் அண்ணன் கிளம்பி விட்டாரா? என்று கேட்டால், நிகழ்ச்சிக்கு வந்தார்; பக்கத்தில் ஒரு வேலை விஷயமாகப் போய்விட்டு இப் பொழுது வந்திருக்கிறார் என்று சொல்வார் கள். அவரைப்பற்றி நிறைய பேரிடம் விசாரித்தேன்.

கடின உழைப்பாளி அவர்; அவரைப் போன்று யாரையும் பார்க்க முடியாது நீங்கள் என்று சொன்னார்கள். அதைக் கேட்டு வியந்து போனேன் நான். அப்பொழுதுதான் நான் நினைத்தேன், ஸ்டாலின் அங்கிள் கீழே பணியாற்ற வேண்டும் என்றால், இவர் எவ்வளவு கடின உழைப்பாளியாக இருக்கவேண்டும் என்று. மகளிருக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரும் ஆட்சி தி.மு.க. ஆட்சி தான். மகளிருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றஆட்சியை நினைத்தால் மன நிறைவாக இருக் கிறது. எல்லோருக்கும் தெரியும், ஸ்டாலின் அய்யா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்து போட்ட ஆணை- மகளிருக் குப் பேருந்தில் இலவச பயணம்தான். எவ்வளவு மகளிர் இதனால் பயனடை கிறார்கள் தெரியுமா? எனக்குத் தெரிந்து நிறைய பேர் பயன டைந்திருக்கிறார்கள்; வேலைக்குப் போகின்ற பெண்கள், பேருந்து கட்ட ணத்திற்கே நிறைய செலவாகி விடுகிறது என்று சொல்கிறார்கள்; ஆனால், இன்றைக்கு அந்தப் பணம் சேமிப்பாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

இன்றையஆட்சியின் மூலம் பயன் பெறுகிறவர்கள் நிறையபேர். பால் விலையை மூன்று ரூபாய்குறைத் திருக்கிறார்கள். ஏனென்றால், கஷ்டப்படுகிறவர்களுக்குத் தான் இதனுடைய அருமை தெரியும்; ஏ.சி. ரூமில் அமர்ந்திருக்கின்றவர்களுக்குத் தெரியாது. எங்களுடைய சினிமாத்துறைக்கும் நிறைய நல்ல விஷயங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறார்கள் அண்ணே. (கண்டிப்பாக செய்வார் என்று அமைச்சர் சேகர்பாபு சொன்னார்).

கொரோனா காலகட்டம் என்பதால், பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள். அந்தப் பாதிப் பிலிருந்து விடுபட்டு நாங்கள் வெளியே வந்து, எங்களுக்கும் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இங்கே வருவதற்கு முன்பாகஒரு சுவாரசியமான விஷயம் நடந்தது. என்னுடைய மகள் என்னிடம் வந்து கேட்டாள், என்னம்மா எங்கே வெளியில் போகிறீர்கள்? என்று. பிறந்த நாள் விழாவிற்குப் போகி றேன் என்றேன். யாருடைய பிறந்த நாள் விழா என்றாள்.

ஸ்டாலின் அங்கிளுக்குப் பர்த்டே பங்க்ஷன் நடத்துகிறார்கள்; அந்த பங்க்ஷனுக்குத்தான் நான் போகிறேன் என்றேன். ஓகே, ஓகே, ஸ்டாலின் அங்கிள் வராறா? என்று கேட்டாள். ஏய், இரு, இரு எனக்குத்தான் அவர் ஸ்டாலின் அங்கிள்; உனக்கு எப்படி அவர் அங்கிள் ஆவார்? என்றேன். அப்படியென்றால், நான் எப்படி கூப்பிட வேண்டும் என்றாள். “நீ ஸ்டாலின் தாத்தான்னு கூப்பிடு” என்றேன். உடனே என் மகள், அம்மா, அவர் பார்ப்ப தற்கு எப்படி இருக்கிறார்? ஒரு நரைமுடி கூட கிடையாது; எவ்வளவு ஸ்லிம்மா, ட்ரிம்மா, பிரிஸ்க்கா இருக்கிறார்; எவ்வளவு வேகமாக நடக்கிறார், ஓடுகிறார், சைக்கிள் ஓட்டுகிறார் அவரை நான் தாத்தா என்று கூப்பிட மாட்டேன்; அங்கிள் என்று தான் கூப்பிடுவேன் என்றாள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு வந்து, கெத்தா, எங்கள் சி.எம்.யா என்று சொல்ற அளவிற்கு ஒருத்தர் இருக்கிறார். இவ்வளவு வரைக்கும் ஈகோ, பிரச்சினைகள் இருந்தது. யாரைப் பற்றியும் நான் குறை சொல்வதற்கு வரவில்லை. ஆனால், முதல் முறையாக எந்தப்பிரச்சினையாக இருந்தாலும், அந்தப் பிரச்சினையை பின்னுக்குத் தள்ளி, எது மக்களுக்கு நல்லதோ, அதை செய்து விட்டுப்போகிறார். அதை நினைக்கும்பொழுது என்னைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைக்கு ஒரு யங்ஸ்டராநாங்கள் வெளியில் வருகிறோம் என்றால், ஈகோ அற்ற ஆட்சி - யாராக இருந்தாலும் சரி, இந்த ஆட்சியில் அது மிகவும் பிடித்த விஷயமாக எனக்கு இருக்கிறது. வெரி வெரி வெரி ஹாப்பி; அதற்காக நான் பெருமைப்படுகிறேன். என்னை அழைத்ததற்கு நன்றி! முதல் முறையாக என் மனதார ஒரு வரைப் புகழ்ந்து விட்டுப் போகிறேன்.

இவ்வாறு நடிகை சங்கீதா உரையாற்றினார்

banner

Related Stories

Related Stories